உலகம்

முதல் ஊடக சந்திப்பிலேயே ‘கருக்கலைப்பு’ கேள்வி

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதியாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகத்தின் ஊடகச் செயலாளராக ஜென் சாகி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் நடந்த முதல் பத்திரிகையாளர் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் இடம்பெற்று இருந்தது.

இதன்போது ஜென் சாகி கருத்துத் தெரிவிக்கையில்;

“அமெரிக்க மக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான் பைடன் நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்” என்றார் ஜென் சாகி.

“என்னை இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி பைடன் என்னிடம் கேட்ட போது, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வருவது எவ்வளவு முக்கியமானது என விவாதித்தோம்” என்றார் ஜென் சாகி.

அவர் பேசி முடித்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கான கேள்வி நேரம் தொடங்கியது.

இதன்போது, மெக்ஸிகோ நகர கொள்கை மற்றும் ஹைட் சட்டத் திருத்தம் ஆகிய கருக்கலைப்பு நிதி ஆதரவு குறித்த இரு முக்கிய சட்டங்களைப் பற்றிக் கேள்வி எழுப்பினார் ஒரு பத்திரிகையாளர்.

கருக்கலைப்புக்கு அமெரிக்க மத்திய அரசின் நிதியை வழங்காமல் தடுக்கும் சட்டம் தான் இந்த ஹைட் சட்டத்திருத்தம். இந்த சட்டத் திருத்தத்தை பைடன், முன்பு ஆதரித்து வந்தார். இந்த 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அவர் தன் நிலையை மாற்றிக் கொண்டார். அனைத்து மருத்துவம் சார்ந்த விஷயங்களும் ஒருவரின் உரிமை என்று தான் நம்புவதாகக் கூறினார் பைடன்.

இது குறித்து கேள்வி எழுப்பிய போது “ஜனாதிபதி பைடன் தேவாலயத்துக்கு தொடர்ந்து செல்லும் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவர். இதற்கு மேல் இது குறித்துக் கூற என்னிடம் எதுவும் இல்லை” என்றார் ஜென்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகளவில் 4 கோடியை கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

ப்ருசெல்ஸ் நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் – ஸமாஸ் மோதல் – அவசர சந்திப்புக்கு ஐ.நா அழைப்பு.