விளையாட்டு

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பெற்ற ஓட்டங்கள்…

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

நேற்று காலியில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி 97 ஓவர்கள் வரையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ருவன் பெரேரா 75 ஓட்டங்களுக்கு 05 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதன்படி போட்டியின் இரண்டாம் நாளான இன்று இலங்கை அணி தனது துடுப்பாட்டத்தை சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளது.

 

 

 

 

Related posts

குசல் மென்டிஸ் இற்கு கொவிட்

ஐந்தாவது தடவையாகவும் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருது லயனல் மெஸிக்கு

அனல் பறக்கும் IPL பைனல் இன்று..