விளையாட்டு

முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

(UTV|COLOMBO) நேற்றைய தினம்(19)  தென்னாபிரிக்காவின், கேப்டவுனில் இடம்பெற்ற  இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் கமிந்து மென்டிஸ் 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணியும் 20 ஓவர்கள் நிறைவல் 8 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களையே பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இதில் முதலில் துடுப்பாடிய தென்னாபிக்கா அணி 14 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 5 ஓட்டங்ளை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

 

 

 

 

 

Related posts

விதுஷா லக்ஷானியின் பதக்கத்தை பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவிப்பு

இலங்கையுடனான இருபதுக்கு – 20 தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு இரு தலைவர்கள்

இங்கிலாந்து 03 விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்கள்