உள்நாடு

முட்டை விலை தொடர்பில் நாளை மீளாய்வு

(UTV | கொழும்பு) –   முட்டை விலை தொடர்பில் நாளை(28) மீளாய்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாளை(28) அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள உற்பத்திச் செலவு நியாயமானதா என்பது குறித்து இதன்போது பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி கட்டுப்பாட்டு விலையில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக பாடுபட்ட அரச உத்தியோகத்தர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – ரஞ்சித் மத்தும பண்டார.

editor

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் பலி… 9 மாதக் குழந்தை வைத்தியசாலையில்