உள்நாடு

முட்டையின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

வீழ்ச்சியடைந்து வரும் முட்டையின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதாக அந்த சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டையின் விலை வேகமாகக் குறைவடைந்து வருகிறது.

கடந்த காலங்களில் 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை உற்பத்தியாளர்கள் பலர் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை நாடியுள்ளனர்.

இந்தநிலையில், முட்டைக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்து முட்டை உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

Related posts

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் விவகாரத்தில் தவறு நடந்துள்ளது : தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு

புறக்கோட்டை சுமை தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது