வணிகம்

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.5 இனால் உயர்வு

(UTV | கொழும்பு) – ஒரு முட்டையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்ய வர்த்தக அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனையடுத்தே அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறிந்த சோதனை நடவடிக்கையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு அல்லது பழுப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து வர்த்தக அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதையடுத்து, முட்டை உற்பத்தியாளர்கள் தொடர் பரிசீலித்து முட்டையின் விலையை 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். அந்த வர்த்தமானி அறிவிப்பின்படி முட்டைகளை விற்க முடியாது என்று கோரிக்கை விடுத்துள்ளது.விரைவில் நிலையான விலை நிர்ணயிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன், ஒரு முட்டை ரூ.60 முதல் ரூ.70 வரையில் விற்கப்பட்டது.

Related posts

பாவனைக்கு உதவாத 95 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்ப அறிவுறுத்தல்

அனைவரும் இணைந்து விவசாயத்துறையை வளப்படுத்த வேண்டும் – நஸீர் அஹமட்

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது