உள்நாடு

முடக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணம் உட்பட சில பகுதிகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருக்குமென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி பிரதேசங்களிலிருந்து எக்காரணத்திற்காகவும் எவரும் வெளியில் செல்லவோ அல்லது வெளி பிரதேசங்களிலிருந்து மேற்படி பிரதேசங்களுக்குள் உட் பிரவேசிப்பதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அவசியம் ஏற்படுமானால் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் மற்றும் ஏனைய எந்த ஒரு நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக எந்த அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

எனினும் மிக முக்கியமான காரணங்களுக்காக அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள தமது பிரதேச பொலிஸ் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு அனுமதி பெறாத எவரும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்களென்றும் அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘அஸ்வெசும’திட்ட கொடுப்பனவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

முன்னாள் ஜனாதிபதி ரணிலை பாராட்டிய IMF பிரதிநிதிகள்

editor

IMF பிரதிநிதி குழு இன்று இலங்கைக்கு