சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையானது நிறுத்தம்…

(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையானது, தரநிர்ணயக் குழுவால் தரக் காப்புறுதி வழங்கப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவுக்கும் முச்சக்கர வண்டிகளது சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று(03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்காக மீட்டர் பொருத்தும் நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு கொண்ட வரப்படும் மீட்டர்கள் குறித்து உரிய தரமில்லையென கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு, மீட்டர்களின் நிலை குறித்து தர நிர்ணய அலுவலகம் ஊடாக கலந்துரையாடி எதிர்வரும் நாட்களில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வெள்ளைச்சீனி, பருப்பு, கோதுமை மாவின் விலைகள் குறைவடைகின்றன

தேர்தல் பிரச்சாரம்: கோத்தாவின் பாதுகாப்பிற்கு யோசிதவினால் தொண்டர் குழு

விஜயகலா மகேஸ்வரன் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டார்