கிசு கிசு

முக்கிய சதித்திட்டம் ஒன்றை வெளியிட தயார்- நாமல் குமார?

(UTV|COLOMBO)-முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதானி ஒருவரால் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி ஒன்று குறித்து எதிர்வரும் 48 மணி நேரத்துக்குள் தெரிவிப்பதாக ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான குரல் பதிவை 12ஆம் திகதி பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபராக நாலக சில்வா பதவி வகித்த போது இந்த விடயம் தொடர்பான குரல் பதிவை அவரிடம் தான் வழங்கிய போதும் , அவர் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென்றும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

மதஸ்தலம் ஒன்றை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவிருந்த குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான தகவல் இந்த குரல்பதிவு மூலம் உறுதியாவதாகவும் இந்த சதித்திட்டம் 150 இலட்சங்களுக்கு முன்னெடுக்கப்படவிருந்ததாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான அவர் தற்போது அரசியலுடன் தொடர்புபட்டுள்ளாரென்றும் இதற்கமைய இன்னும் 48 மணி நேரத்துக்குள் இந்த சதி முயற்சி குறித்த தகவலை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

சமூக வலைதளத்தில் முடக்கப்பட்ட இராஜ், பதவி இராஜினாமா

இனியாவது முஸ்லிம் சடலங்களை ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்

பிரபாகரனை வைத்து அரசுடன் மோதும் ஞானசார தேரர்