சூடான செய்திகள் 1

முகப்புத்தகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட காதலால் நடந்த விபரீதம்

(UTV|COLOMBO)-சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் என்றுமே செயற்பட்டதில்லை. அவள் மீது அளவு கடந்த பாசம்.

சிறுமி கையடக்க தொலைபேசி கேட்டதால் பெறுமதிவாய்ந்த கைபேசி ஒன்றினை பெற்றோர் வாங்கிக்கொடுத்துள்ளனர்.

சிறுமி கைபேசி வாயிலாக முகப்புத்தக கணக்கொன்றை உருவாக்கி பலரையும் நண்பர்களாக இணைத்துக்கொண்டுள்ளார்.

அவரின் முகப்புத்தக கணக்கிற்கு குருநாகல் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் நண்பராகுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிறுமி அவருடன் தொடர்ச்சியாக உரையாடி வந்துள்ளார்.

சிறிது காலத்தில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட இருவரும் பல தடவைகள் தனியாக சந்தித்து வந்துள்ளனர்.

காலம் கடந்து செல்ல இருவரும் பிரியாதிருக்க சிந்தித்து திருமணம் புரிந்துக்கொள்ள இணக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

மறுதினம் காலையில் வழமையை போன்று அன்றும் பாடசாலைக்கு சென்றுள்ளார் 14 வயதுடைய அந்த சிறுமி…….. ஆனால் மீண்டும் அவள் வீடு திரும்பவில்லை.

அம்பாந்தோட்டை மாவடத்தில் வீரவில பகுதியை சேர்ந்த அந்த மாணவியின் பெற்றோர் பாடசாலைக்கு சென்று தேடியுள்ளனர்.

மேலதிக வகுப்பு நடாத்தப்படும் இடம், அயவலர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் என அனைவரிடமும் தொலைபேசி வாயிலாக கேட்டு தேடியுள்ளனர்.

எனினும் மாணவியான சிறுமியின் விபரம் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.

பொறுமையிழந்த பெற்றோர் கண்ணீருடன் வீரவில காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் கைபேசி இலக்கத்தினை கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர் சிறுமி குருநாகல் பகுதியில் இருப்பதனை கண்டறிந்துள்ளனர்.

இதன்பின்னர் அவர்களை தேடிச் சென்ற போது சிறுமி குறித்த இளைஞருடன் வீடொன்றில் இருந்துள்ளார்.

இருவரையும் கைது செய்த காவல் துறை, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பின்னர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமியை முதலில் திஸ்ஸமாராம பகுதிக்கு காதலன் அழைத்து பின்னர் அவரின் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக தெரிவித்து குருநாகல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி சிறிது காலம் இருவரும் சேர்ந்து வாழ்ந்து நான்கு வருடங்களின் பின்னர் திருமணம் செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு நான்கு வருடங்கள் சென்றதன் பின்னரே திருமண வயதான 18 வயதை அடைவார் என்பதாலேயே இளைஞர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய சிறுமி அவருடன் வசிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறுமி குறித்து பெற்றோருக்கு அறவிக்கப்பட்டதன் பின்னர் இளைஞர் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

சிறுமியை அவரின் பெற்றோருடன் அனுப்ப மறுத்த இளைஞர் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டதனை தொடர்ந்து இளைஞர் கைவிலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சிறுமி நிபந்தனையுடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இளைஞரை நீதிமன்றம், நிபந்தனை பிணையில் விடுதலை செய்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அதிகரிக்கப்படவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டம்

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது

தீர்மானமின்றி நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் (UPDATE)