உள்நாடு

முகநூல் பதிவு குறித்து விஜயதாசவிடம் இருந்து முறைப்பாடு

(UTV | கொழும்பு) – தற்போது விளக்கமறியலில் உள்ள ஒருவருக்கு விசுவாசமாக இருப்பதாக குற்றம் சுமத்தி தவறான மற்றும் தீங்கிழைக்கும் முகநூல் பதிவை வெளியிட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று(20) கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

அமைச்சரின் இந்த முறைப்பாட்டில், நீதித்துறை அமைச்சர் என்ற வகையில், தன்னையும், நீதித்துறை உட்பட ஒட்டுமொத்த சட்ட அமுலாக்க அமைப்புகளையும் கேலி செய்து, அவமானப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபரை கேலி செய்து கேவலப்படுத்தும் இந்த முகநூல் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பிலேயே இந்த முகநூல் பதிவு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது நடவடிக்கைகள் இந்நாட்டின் சட்ட அமைப்பை சீர்குலைத்து ஒட்டுமொத்த மக்களின் மனதையும் பாதிக்கச் செய்யும் என உறுதியாக நம்புவதாகவும் அமைச்சர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் செய்த குற்றத்தின் பாரதூரம் மற்றும் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு அவரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அமைச்சர் மேலும் தனது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்.

மின்சார முச்சக்கரவண்டிகள் தொடர்பில் வெளியான தகவல்!

“சமூகப் பிரச்சனைகளை தீர்க்க வக்கில்லாது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்”