சூடான செய்திகள் 1

முகநூலில் காவல்துறையை அவமதித்து பதிவிட்ட இளைஞர் கைது

(UTV|COLOMBO) பிட்டிகல காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் அனைத்து இலங்கை காவல்துறையையும் அவமதிக்கும் வகையில் முகநூலில் கருத்துக்களை பதிவிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி முகநூல் கணக்கு ஊடாக பிட்டிகல காவல்நிலைய அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பயன்படுத்தி குறித்த இளைஞர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பின்னர் காவல்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 22 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நாரன்ஓவிட்ட பகுதியை சேர்ந்தவருடன், இன்றைய தினம் பிட்டிகல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

 

Related posts

நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

மாத்தறை கொள்ளைச் சம்பவம் – வாகனத்துடன் ஒருவர் கைது

சரத் வீரசேகரவின் தமிழர்களுக்கு எதிரான இனவாத போக்கு : உக்கிரமடையும் எதிர்ப்பு