(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் முறையாக முகக்கவசம் அணியாத 2,608 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களை தேடும் நோக்கில் நேற்று 851 போக்குவரத்து அதிகாரிகளின் பங்களிப்புடன் பொலிஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
3,233 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த பயணிகளும், முச்சக்கர வண்டிகளில் பயணித்த 3,264 பயணிகளும் இதன்போது பரிசோதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் மொத்தம் 9,661 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
![](https://www.utvnews.lk/wp-content/uploads/2021/06/UTV-NEWS-ALERT-new.jpg)