(UTV | பிரேசில்) – கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று.
அதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோவின் அலட்சிய போக்கே இந்த சுகாதார நெருக்கடிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரசை சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டு பேசி வரும் ஜெயீர் போல்சனரோ, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியமற்றவை என்று கூறி வருகிறார். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் அவர் கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் முக கவசம் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார். இதையடுத்து சா பவுலா மாகாணத்தின் கொரோனா பாதிப்பு விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாமல், அதிக அளவில் ஆட்களை திரட்டி பேரணியில் ஈடுபட்டதாக கூறி மாகாண நிர்வாகம் ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோவுக்கு 100 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது.
பிரேசிலில் இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![](https://english.utvnews.lk/wp-content/uploads/2020/10/UTV-NEWS-ALERT.jpg)