உள்நாடுசூடான செய்திகள் 1

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!

(UTV | கொழும்பு) –

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று(11) முதல் சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் காரணமாக கடந்த 4ஆம் திகதி மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் மூட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் இன்று முதல் சில கட்டங்களின் கீழ் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்தார்.

விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பமாகவுள்ளன.

சமூக விஞ்ஞான பீடம் மற்றும் மனிதநேய பீடம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என உபவேந்தர்  குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு உத்தரவினை மீறிய 691 பேர் கைது

ஐ.தே.கட்சியின் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்