உலகம்

மீளவும் பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவல் மெக்ரன்

(UTV |  பாரீஸ்) – பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மெக்ரன் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இமானுவல் மெக்ரனுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.

இதனால் நேற்று நடந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் மெக்ரன் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது முறை ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அறிந்த இமானுவல் மெக்ரன், வாக்களித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

மேலும், இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மெக்ரனுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, போர்ச்சுக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

எகிப்தில் முகக் கவசம் கட்டாயமாகிறது

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் [VIDEO]

முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு – 6 பேர் பலி