உலகம்

மீளவும் ஏற்றுமதிக்கு தயாராகும் இந்தியா

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஒக்டோபர் முதல் இந்தியா கொவிட் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர் நிறுவனமான சீரம், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதிகளை நிறுத்தி, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்தது.

இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி, வோஷிங்டனுக்கு சென்றுள்ள போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் சொந்த தடுப்பூசி இயக்கத்திற்காக இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் எதிர்வரும் ஒக்டோபரில் 300 மில்லியனுக்கும் அதிகமான அளவுகளை உற்பத்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் உபரிகளை கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்துக்காக மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் என்றும் மாண்டவியா அறிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் சுதந்திரதினத்தன்று – பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி

தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! பலஸ்தீனின் நிலை என்ன?

ரஷ்ய சொகுசு படகை சிறை பிடித்த அமெரிக்கா