சூடான செய்திகள் 1

மீனவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

(UTV|COLOMBO)-எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர்  விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

 

இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படும். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டிசல் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவை செலவிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

வெளியிணைப்பு மோட்டார் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 35 கோடி ரூபா செலவிடப்படும். பைபர் கிளாஸ் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க 337 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 115 கோடி ரூபா செலவு செய்யப்படும் எனகடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர்  விஜித்தமுனி சொய்ஸா மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து ஜனாஸா நலன்புரிச்சங்கங்களுக்கு நீர்த்தாங்கிகளை வழங்கி வைத்தார்.

தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம்

கந்தக்காடு : பார்வையிடச் சென்றோரில் எவருக்கும் தொற்று இல்லை