வகைப்படுத்தப்படாத

மீதொட்டுமுல்லை குப்பைமேடு – உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு

(UDHAYAM, COLOMBO) – அசம்பாவிதத்தில் பலியான 33 பேர் சார்பிலும் 10 இலட்சம் ரூபா செலுத்தப்படும். தேசிய இடர்காப்பு முகாமைத்துவ காப்பறுதி திட்டத்தின் கீழ் திறைசேரி ஊடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்வழங்கியுள்ளது..

இந்த அசம்பாவிதத்தில் 393 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 670 பேர் இடம்பெயர்ந்தார்கள். 60 வீடுகள் முழுமையாகவும், 27 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்தன. 200 வீடுகள் அபாய நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டது.

புhதிக்கப்பட்ட குடும்பங்களில் விருப்பம் தெரிவித்த குடும்பங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நிர்மாணித்த வீடுகள் வழங்கப்படும். விருப்பம் தெரிவிக்காத குடும்பங்களுக்கு வீட்டின் மதிப்பீட்டு அமைய நிதி உதவி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் வீட்டுத் தளபாடங்களை விலை கொடுத்த வாங்க இரண்டரை இலட்சம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

ஆபத்தான இடங்களில் இருந்து அப்புறுத்தப்பட்ட குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்கப்படும். நிரந்தர வீடுகளில் வதிவதற்காக செல்லும் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

Related posts

அட்டன் மல்லியப்பூ தோட்ட மக்களின் வாழ்க்கையில் சுபீட்சம் மலர்கிறது : ஸ்ரீதரன் தெரிவிப்பு

‘பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

வடக்கிற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!