உள்நாடு

மீண்டும் பொது நிகழ்வுகளுக்கு மட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அபாயம் எழுந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார நடைமுறைகள் வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சமய நிகழ்வுகள், பொது நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன் வரையறுக்கப்பட்ட தொகையினரே குறித்த பங்குபற்ற முடியும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், வீடுகளில் வெளியார் 10 பேருக்கு மேல் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளியான புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களாவன,

வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ள ஏனையவர்களுக்கும் தொற்று அபாயத்தைக் குறைக்க முடியும்.

மெய்நிகர் சந்திப்புகள் வலுவாக ஊக்குவிக்கப்படுகின்றன.

மண்டபம், நிகழ்விடத்தில் இடம்பெறும் நிகழ்வுகள், ஒன்றுகூடல்களில் நிகழ்விடத்தின் மொத்த கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கினரே பங்கேற்க முடியும்.

மொத்த பங்கேற்பாளர் தொகை 150 -க்கு மேற்படாமல் இருந்தல் வேண்டும்.

உள்ளரங்குகளில் நிகழ்விடத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கினர் 100 பேருக்கு மேற்படாத வகையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

வெளிப்புற தனிப்பட்ட கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

வர்த்தக மையங்கள் சுகாதார அதிகாரிகளின் கடுமையான மேற்பார்வையின் கீழ் மொத்த வியாபாரத்திற்காக திறக்க அனுமதிக்கப்படும்.

உணவு கையாளும் நிலையங்களில் அதன் கொள்ளளவு திறனுக்கு மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்ற அனுமதிக்கப்படும்.

Related posts

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குமான வாய்ப்பை வழங்குகிறது – அலி சப்ரி.

மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

காலி-கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு