சூடான செய்திகள் 1

மீண்டும் பணிபுறக்கணிப்பிற்க்கு ஆயத்தமாகும் தொடரூந்து தொழில்நுட்ப சேவை சங்கம்

(UTV|COLOMBO)-தமது சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கையை இன்றைய தினத்திற்குள் எழுத்து மூலம் வழங்காவிடின் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படப்போவதாக தொடரூந்து தொழில்நுட்ப சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கம் கடந்த 29 ஆம் திகதி 48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு, பின்னர் குறித்த பிரச்சினை தொடர்பில் அமைச்சர் சரத் அமுனுகமவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது துரிதமாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்த போதும், இதுவரை தீர்வு கிடைக்கப்பெறவில்லை என தொடரூந்து தொழில்நுட்ப  சேவை சங்கத்தின் இணை செயலாளர் கமல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்று கூடவுள்ள தமது நிறைவேற்று குழு கூட்டத்தின் போது பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

30க்கு மேல் அதிகரிக்குமாயின் நடவடிக்கை

லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது!