உள்நாடு

மீண்டும் டொலர் தட்டுப்பாடு : தேங்கி நிற்கும் எரிபொருள் கப்பல்கள்

(UTV | கொழும்பு) – டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை அந்த கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அதனை தவிர மேலும் 2 டீசல் கப்பல்களும் ஒரு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரியொருவரிடம் வினவிய போது, கப்பல்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்குரிய டொலரை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

Related posts

கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில்

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி

SLFPயின் புதிய நியமனம்!