உள்நாடு

மீண்டும் சிங்கள- முஸ்லிம் இன மோதல்? சம்பிக்கவின் எதிர்வுகூறல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் மத இன வேறுபாடுகள் தலைதூக்கலாம் எனவும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தவும் பௌத்த இஸ்லாமிய அடிப்படையில் மோதலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரணவக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது இன மதப் பிளவுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு தற்போதைய ஜனாதிபதிக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம்

அசாத் மௌலானா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!