உள்நாடு

மீண்டும் கொழும்பு குப்பைகள் புத்தளத்தில் – இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்.

கொழும்பிலிருந்து குப்பைகளை புகையிரதம் மூலம் கொண்டுசென்று அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இளைஞர்கள் இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கொழும்பிலுள்ள குப்பைகூளங்கள் புகையிரதம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு புத்தளம் அருவைக்காட்டில் கொட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் புத்தளம் மணல்குன்று புகையிரத பாதைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018 செப்டெம்பர்  28ஆம் திகதி புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக புத்தளம் மக்கள் 100 நாள் சத்தியாக்கிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இரவு வேளைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டிப்பர் வாகனத்தின் மூலம் குப்பைகள் அருவக்காட்டுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர்  குப்பைகளை கொண்டுசெல்லும் இந்த செயற்பாடு நிறுத்தப்பட்டது. 

அதன் பின்னர், மீண்டும் இன்று கொழும்பிலிருந்து குப்பைகளை புகையிரதம் மூலம் ஏற்றிச் சென்று அருவைக்காட்டில் கொட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

இன்று முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு!