கேளிக்கை

மீண்டும் இணையும் ரோஜா ஜோடி

(UTV|COLOMBO) – ரோஜா படத்தில் ஜோடியாக நடித்த அரவிந்த்சாமி, மதுபாலா 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான அரவிந்த்சாமி, பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமானார்.

சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது, விஜய் இயக்கம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இந்நிலையில் தலைவி படத்தில் மதுபாலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே 27 ஆண்டுகளுக்கு முன் வெளியான ரோஜா படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பாலிவுட் படம் ஒன்றிலும் இருவரும் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

கள்ளக்காதலால் நடுத்தெருவில் பிரபல சின்னத்திரை நடிகை அடிதடியில் …காணொளி

கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா

ஷாருக்கானுடன் கைக்கோர்த்த அட்லீ?