கேளிக்கை

மீண்டும் இணையும் நட்சத்திர ஜோடி

(UTV | இந்தியா) –  சூர்யா – ஜோதிகா, மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா – ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த ‘சில்லுனு ஒரு காதல் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த படமாக வெற்றி பெற்றது.

இதன்பின்னர் ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்துள்ள சூர்யா, அவருடன் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ள படத்தை ஹலிதா ஷமீம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கி பிரபலமானவர். மேலும் இப்படத்தை மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒரே நாளில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ரியானா

சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவி சிலை

அட்லியை கலாய்த்த இயக்குனர்