கேளிக்கை

மீண்டும் ஆன்மீக வழியில் சிம்பு

(UTV |  சென்னை) – ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சிம்பு, அவ்வப்போது பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சிம்பு, அவ்வப்போது பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, கர்நாடகாவில் உள்ள முருதீசுவரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள பிரம்மாண்ட சிவன் சிலை முன்பு சிம்பு, சாமி தரிசனம் செய்தவாறு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோனசுக்கும் நிச்சயதார்த்தம்-முன்னாள் காதலி வருத்தம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் அனுஷ்கா

அட்லீயின் அதிஷ்ட நடிகர் இவர் தான்