கிசு கிசுகேளிக்கை

மீடூ-வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்…

(UTV|INDIA)-பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவரும் நிலையில், சிகை அலங்கார நிபுணர் சப்னா மோடி பவனானி, அமிதாப்பச்சன் மீது குறை சொல்லியிருக்கிறார்.

மீ டூ இயக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ‘மீ டூ’வில் சிக்கி உள்ளார்.
இந்தி திரையுலகில் புகழ்பெற்ற சிகை அலங்கார நிபுணராக இருக்கும் சப்னா மோடி பவனானி தனது டுவிட்டரில் அமிதாப்பச்சன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

“நீங்கள் நடித்த பிங்கி படம் வெளியாகி உங்களுக்கு நல்ல பெயர் பெற்று தந்து இருக்கலாம். ஆனால் உங்களுடைய நல்ல பெயர் விரைவில் கெடப்போகிறது. உங்களுடைய சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். உண்மை கண்டிப்பாக வெளியே வரத்தான் செய்யும். இப்போது நீங்கள் உங்களது கையை கடிக்க தொடங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும்.”
இவ்வாறு சப்னா மோடி பவனானி கூறியுள்ளார்.

அமிதாப்பச்சன் இரு தினங்களுக்கு முன்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கண்டித்தும், மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்த நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க இன்று புதிய அணுகுமுறை?

மஹிந்த வைத்தியசாலையில்… – மறுக்கும் டுவிட்டர் பதிவு

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் பிரதமர் – ஜனாதிபதி கலந்துரையாடல்