வணிகம்

மிளகு கொள்வனவிற்கு விசேட வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) – ஒரு கிலோ மிளகை 800 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு உள்ளிட்ட சிறிய பெருந்தோட்ட உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் இந்த கொள்வனவு இடம்பெறுகின்றது.

இந்த கொள்வனவில் அரசாங்கம் தலையிடுவதற்கு முன்னர் இடை தரகர்களினால் 1 கிலோ மிளகு 300 ரூபாவிற்கும், 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெரும்போக நெல் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

ஆயிரம் ரூபா கனவு கக்குமா?