வணிகம்

மிளகாய் பயிற்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-தேசிய சந்தையில் பச்சைமிளகாய்க்கு நிலவும் கேள்விக்கிணங்க, பயிற்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2018/19 ஆம் ஆண்டுகளில் பெரும்போகத்தின்போது 15,000 ஹெக்டேயரில் பச்சைமிளகாய் செய்கையை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சந்தையில் பச்சைமிளகாய்க்கு அதிக கேள்வி நிலவுவதுடன், ஒரு கிலோகிராம் பச்சைமிளகாயின் விலை 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

Related posts

“மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவே சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்கள்”

தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்களை சந்தைப்படுத்தவில்லை

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு