உள்நாடுசூடான செய்திகள் 1

மிலேனியம் சவால் கைச்சாத்திடுவதில்லை

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய மிலேனியம் சவால் (MCC) நிதியுதவி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

580 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பகுதிகள்

நாடாளாவிய ரீதியில் நாளை முதல் விசேட போக்குவரத்து சோதனை

editor

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை