(UTV | வொஷிங்டன்) – அமெரிக்காவின் மியாமி பகுதியில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.
தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முதல் கட்டமாக அவர்கள் 12 வயது சிறுவன் உள்பட 30-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.