அரசியல்உள்நாடு

மியன்மாருக்கு செல்லவுள்ள இலங்கை வைத்திய குழு தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து வைத்திய குழு ஒன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, மியன்மார் அரசாங்கம் அறிவித்தவுடன் சம்பந்தப்பட்ட வைத்தியக் குழுவை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

களுத்துறை பிரதேசத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியபோது, அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

“மியன்மாருக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள், அதேபோல் தேவையான மற்ற பொருட்களை வழங்குவதற்கு இப்போது அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கைகளை தயார் செய்து வருகிறது.

அதேபோல், இந்த நேரத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு வைத்திய உதவி தேவைப்படுகிறது.

அதன்படி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அனுபவம் வாய்ந்த விசேட வைத்திய நிபுணவர்கள் சிலருடன் செவிலியர் சுகாதாரக் குழுவை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளோம்.

இதனை நாங்கள் விசேட நடவடிக்கைகள் அமைச்சு மூலம் மியன்மார் தூதரகத்திற்கு தெரிவித்தோம்.

அவர்கள், தயாராக வைத்திருக்குமாறு கூறினார்கள், தேவை ஏற்பட்டவுடன் அதனை உடனடியாக தெரிவிப்பதாக கூறினார்கள்.

அதன்படி, செய்தி வரும் வரை தேவையான உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.” என்றார்.

Related posts

எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியை கண்ட இலங்கை

இன்று அமைச்சரவையில் சிறிய மாற்றம்!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம்!