உள்நாடு

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) – உள்ளூர் சந்தையில் அரிசியின் விலையை நிலைப்படுத்துவதற்காக மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை மற்றும் மியன்மார் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு மெட்ரிக் டன் அரிசி 460 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இலங்கை அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான இருப்பை பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதன்பிரகாரம் இவ்வாறு மியன்மாரிடமிருந்து அரிசி கொள்வனவு செய்ய வர்த்தக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையத்தில் இருந்து 201 பேர் வீடுகளுக்கு

கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

இலங்கைக்கு விரைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!!