உள்நாடு

மின் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண பேச்சுவார்த்தை

(UTV | கொழும்பு) –  மாதாந்தம் தேவையான அளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தற்போது மின்சார சபைக்கு சமர்ப்பிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க செயற்திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் இலங்கை மின்சார சபைக்கு விஜயம் செய்து அதன் அதிகாரிகளுடன் நேற்று விசேட சந்திப்பொன்றை நடாத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தற்போதைய மின் நெருக்கடிக்கு முடிவு கட்டுதல், தடையில்லா மின்சாரம் வழங்குவதில் உள்ள தடைகளை நீக்குதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Related posts

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம்

வாகன வகைகளின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத்தில் மட்டு

கொவிட் 19 – தொடர்ந்தும் 132 நோயாளிகள் சிகிச்சையில்