உள்நாடு

மின் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும் என அவர கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை கடமைப்பட்டிருப்பதாகவும் ஆனால் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக் காலமாக இரண்டு மின்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், அது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3,000 கோழி குஞ்சுகள் தீக்கிரை

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு