உள்நாடுசூடான செய்திகள் 1

மின் துண்டிப்பு குறித்த இறுதி தீர்மானம் இன்று

மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான தீர்மாத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத் துண்டிப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 6 மணி நேரத்திற்குள் 4 பிரிவுகளாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இருப்பினும், நேற்று (12) பௌர்ணமி தினம் என்பதால், குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததால், மின் விநியோத் துண்டிப்பை இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவில்லை.

தற்போது, ​​நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பணிகளை விரைவாக முடித்த பின்னர், மின்பிறப்பாக்கிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் நாளை (14) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன கைது

நாட்டை முடக்குவது : மாலை தீர்மானம்

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்