உள்நாடு

மின் துண்டிப்பு – அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

(UTV|கொழும்பு)- கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இன்று (26) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால், பேராசிரியர் ராகுல அத்தலகே தலைமையில் 9 பேரை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் அறிக்கை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளும் குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேலும் 17 கடற்படையினர் பூரண குணம்

சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

பாராளுமன்ற தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணி ?

editor