உள்நாடு

மின் கட்டண திருத்தம் குறித்த அறிவிப்பு நாளை

(UTV | கொழும்பு) – மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு நாளை(09) வெளியிடப்படவுள்ளது.

பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அன்றைய தினம் மின் கட்டண திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாளைய தினம் நிதி அமைச்சு, வலுசக்தி அமைச்சு மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியனவற்றிக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

புதிய கட்டண திருத்தம், மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

புதிய கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் முன்னதாக கோரியிருந்தது.

இதற்கமைய, கிடைப்பெற்ற யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

{VIDEO} மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச கேள்வி

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை