உள்நாடு

மின் கட்டணத்தை செலுத்த தவறும் நுகர்வோருக்கு கால அவகாசம்

(UTV | கொழும்பு) – மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு, எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (17) பிறப்பிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய 03 மாதங்களுக்குள் தாமத கொடுப்பனவை செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தேசிய கட்டமைப்பிலிருந்து இவர்களுக்கு கிடைக்கும் மின்சார விநியோகத்தை துண்டித்து, அவர்களிடம் காணப்படும் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சீதுவ தேரர் கொலை : சந்தேகத்தின் அடிப்படையில் மற்றுமொரு தேரர் கைது

மீண்டும் எரிவாயு சிலிண்டருடன் திரண்ட மக்கள்

யுவான் வாங் 5 இனது ஆராய்ச்சி சர்வதேச விதிமுறைகளின்படி நடத்தப்படும் – சீனா