கிசு கிசு

மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்…

(UTV|SOUTH AMERICA) தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய 2 நாடுகளும் திடீர் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கின.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ரயில்கள்  ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது. மேலும் மின்வெட்டு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் தொடர்பும் முடங்கியது. இந்த திடீர் மின்வெட்டு காரணமாக 2 நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பிரேசில் மற்றும் பராகுவேயின் சில பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.

பலமணி நேரங்களுக்கு பிறகு படிபடியாக மின்இணைப்பு சீரடைய தொடங்கியது. அர்ஜென்டினாவில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு 56 சதவீத மின்இணைப்பு திரும்ப கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் உருகுவேயிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான மின்இணைப்பு கிடைத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

Related posts

தேங்காய் சம்பல் அரைக்கும் சங்கா

அரிசி என்றாலும் அரசியல் என்றாலும் களையெடுப்பது அவசியம்

பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை?