உள்நாடு

மின்வெட்டு அமுலாகாது

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஜெனரேட்டர் பழுதடைந்துள்ள காரணத்தினால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட ஜெனரேட்டர் மீண்டும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்பக் கோளாறினால் இயந்திரம் பழுதடைந்துள்ளதாகவும், இதனால் தேசிய மின்வட்டத்திற்கு 270 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

நாளை 24 மணி நேர நீர்வெட்டு

ராஜிதவுக்கு விளக்கமறியல்

அநுர- சஜித் விவாதம் இன்று! நடக்கப்போவது என்ன?