உள்நாடு

மின்வெட்டினை நிறுத்தக் கோரி ஜனாதிபதி வீட்டுக்கு முன்பாக நபர் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – நுகேகொடை – மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தினமும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரி குறித்த நபர் மின்மாற்றியில் ஏறிய பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46வது கூட்டத்தொடர் இன்று

இன்று மின் வெட்டு இடம்பெறாது

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு