உள்நாடு

மின்சார விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் வாரத்தில் தொடர் மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு அவர் அறிவித்துள்ளார்.

பராமரிப்பு நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்ட மின் தடைகள் குறித்த சர்வதேச அளவுகோல்களுடன் மின்சார சபை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. மின்சார விநியோகம் அடிக்கடி இடைநிறுத்தப்படுவதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை மீளாய்வு செய்த அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வார இறுதி நாட்களில் பராமரிப்பு பணிகளுக்காக தேவையற்ற திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளும் அமைச்சினால் கண்காணிக்கப்படுகிறது. மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக மின்சார சபை பெருமளவிலான பணத்தை செலவிடுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவர் அதிரடியாக கைது

‘இந்தியா அசுத்தமானது’ – ட்ரம்ப் பேச்சில் சர்ச்சை

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இன்று நிறுத்தம்