உள்நாடு

மின்சார சபை பெரும் பொருளாதார நெருக்கடியில்

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், மின்சாரம் வழங்குவதற்கு 44 பில்லியன் ரூபா கடன்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

எனினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களை அசௌகரியப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நேற்று(16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா தொற்றுநோயால் பலர் தங்கள் மின்கட்டணங்களை செலுத்தத் தவறியுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பொதுமக்கள் தொடர்ந்தும் மின் கட்டணத்தை செலுத்த தாமதிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை : கண்ணீர் புகை பிரயோகம்