உள்நாடு

மின்சார சபை ஊழியர்கள் இன்று பாரிய போராட்டம்

(UTV | கொழும்பு) – மின்சார சபை ஊழியர்கள் இன்று பாரிய போராட்டம்

இன்று (27) இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த போராட்டம் காலை 10.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம்
மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கல் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் இருந்து மின்சார சபை ஊழியர்களை கொழும்புக்கு வரவழைத்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க முக்கியஸ்தர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற மொஹம்மெட் பைனாஸ் யார்?

‘ஒரு தேசிய அடையாள அட்டையின் கீழ் ஒரு வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள்’

‘முட்டாள் போராட்டத்தினால் ரணில் ஜனாதிபதியானார்’ – விமல்