உள்நாடு

மின்சார கட்டணம் அதிகரித்தால் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படும்

(UTV | கொழும்பு) –  மின்சாரம் மற்றும் ஏனைய சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால், அந்த அதிகரிப்புக்கு ஏற்ப நீர் கட்டணங்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என கிராமிய மற்றும் பிராந்திய குடிநீர் வழங்கல் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார வாய்மூல பதில் கோரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குடிநீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார – மின்சாரக் கட்டணத்தை ஐநூறு வீதத்தால் அதிகரிப்பதற்கான திட்டம் இருப்பதாக இன்று அறிகின்றோம். தண்ணீர் கட்டணத்தை உயர்த்த தயாரா? இன்று பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்கள் பெரும் சுமையை சுமந்து வருகின்றனர்.

கிராமிய மற்றும் பிராந்திய குடிநீர் வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – நீங்கள் இரண்டு கேள்விகளைக் கேட்டீர்கள். முதல் கேள்வி பொருத்தமற்றது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் கேளுங்கள். இரண்டாவது கேள்விக்கான பதில் என்னவென்றால், மின்சாரம் அதிகரித்தால், நாட்டில் மற்ற எல்லாவற்றிலும் அதிகரிப்பு இருந்தால், செலவைக் கணக்கிட்டு அதிகரிப்பு தீர்மானிக்கப்படும். குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேவைப்பட்டால் முடிவு எடுப்போம். ஏனெனில் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க முடியாது.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

ரிஷாத் பதியுதீனை தடுப்புக்காவலில் வைத்திருப்பதில் ஏன் அரசு கவனம் செலுத்தவில்லை? [VIDEO]

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்