உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் பலி – பெண் ஒருவர் கைது

ஹுரிகஸ்வெவ, சுதர்ஷனாகம பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துயரச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் சுதர்ஷனாகம, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆவார்.

விசாரணையில், சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த பலா மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​பலா மரத்தின் ஒரு கிளை அருகிலுள்ள மின் கம்பியில் மோதியதில், சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதன்போது சிறுவன் மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலா மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக சிறுவனை அனுப்பிய 62 வயதுடைய அயல் விட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜேர்மனியின் சொகுசுக் கப்பல்!

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றம்

ஊரடங்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு