உள்நாடு

மின்சாரம் தாக்கி மாணவன் பலி!

(UTV | கொழும்பு) –

ரத்தோட்ட கிராமப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இளநீர் மரத்தில் ஏறி இளநீரை பறிக்க முற்பட்ட பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் இளநீர் பறிக்கச் சென்ற போது, ​​மற்றுமொரு மாணவன் கொடுத்த மூங்கில் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கம்டுவ – களுகல்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்த வாரத்தினுள் புதிய பிரதமர் – ஜனாதிபதி

தானிஷ் அலிக்கு பிணை

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்