வகைப்படுத்தப்படாத

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

(UTV|KALUTARA)-புலத்சிங்கள, ஹேனதென்ன பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அப்பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் அதிகாரியாக பணிபுரியும் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் வைத்தே மின்சாரம் தாக்கியுள்ளதாகவும், அவரை புலத்சிங்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொடகவெல – எம்பிலிப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் புலத்சிங்கள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

காத்தான்குடியில்நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு

கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்

70ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட அரசாங்கம் தீர்மானம்